You are currently viewing இந்த வயசுல போடுற ஆடையா இது..??  வைரலாகும் நடிகை ராதிகாவின் புகைப்படம்…!!

இந்த வயசுல போடுற ஆடையா இது..?? வைரலாகும் நடிகை ராதிகாவின் புகைப்படம்…!!

இராதிகா சரத்குமார் (Raadhika Sarathkumar, பிறப்பு: ஆகத்து 21, 1963)தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் , அரசியல்வாதி ஆவார். ராடன் மீடியா (Radaan Media Works Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.

இலங்கையில் கொழும்பு நகரில் 1963 ஆகத்து 21 இல் நடிகர் எம். ஆர். ராதாவுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை நிரோஷா, திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார்.

ராதிகா நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாரை 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். முன்னதாக, ராதிகா இரு முறைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர். முதல் முறை மலையாள நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தனையும், பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை உண்டு.

2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவர் தனது கணவர் சரத்குமாருடன் அதிமுகவில் இணைந்தார்.அக்டோபர் 18, 2006இல் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.2007 முதல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி துணைப் பொதுச்செயலாளராக இருக்கிறார்.

நடிகை ராதிகா சரத்குமார் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு வெளிநாட்டு வீதிகளில் நின்றபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுல போடுற டிரஸ்ஸா இது..? என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராதிகா. 70 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதிகா.

கடந்த 1985ஆம் ஆண்டு சமீபத்தில் மறைந்த நடிகர் பிரதாப் போத்தன்-ஐ திருமணம் செய்து கொண்டார் நடிகை ராதிகா. ஆனால், இந்த திருமணம் சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை திருமணமான 9 மாதத்தில் பிரதாப் போத்தனை விவாகரத்து செய்தார் நடிகை ராதிகா.

அதன்பிறகு 1990ஆம் ஆண்டு ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு Rayanne Hardy என்ற மகளும் பிறந்தார். அதன்பிறகு 1992-ம் ஆண்டு ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார் நடிகை ராதிகா.

அதன் பிறகு, கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு நடிகர் சரத்குமாரை காதலித்து கடந்த 2001 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார்.

நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காகவே தன்னுடைய முதல் மனைவியான சாயா என்பவரை விவாகரத்து செய்தார் நடிகர் சரத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. சாயா சரத்குமாருக்கு பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

தற்போது சீரியல்களை தயாரிப்பதில் மற்றும் சீரியலில் நடிப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வரும் நடிகை ராதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

சமீபத்தில் நீச்சல் உடையில் இவர் இருக்கக்கூடிய புகைப்படங்கள் சில இணையத்தில் கசிந்து வைரலானது. சுதாரித்துக்கொண்ட நடிகை ராதிகா என்னுடைய தொலைபேசி ஹேக் செய்யப்பட்டு விட்டது என்னுடைய புகைப்படங்களை என்னுடைய அனுமதி இல்லாமல் யாரோ அப்லோடு செய்துள்ளார்கள் என்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply